கடலை எண்ணெய்:-
தரமான நாட்டு வேர்க்கடலையுடன் தனியா (கொத்தமல்லி விதை) சேர்த்து தயாரிக்கப்பட்டது. பித்தம், செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை தனியா நிவர்த்தி செய்துவிடுவதுடன், சமையலுக்கு தனிச்சுவையைக் கொடுக்கும். தவிர, சமைக்கும் போது வீடே கமகமக்கும்.
பயன்பாடுகள்:-
சமைக்கவும் & பலகாரங்கள் சுடவும் பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெய்
தரமான எள்ளுடன், தூய்மையான பனங்கருப்பட்டி சேர்த்து தயாரிக்கப்பட்டது. எள் இயல்பில் சூட்டுத்தன்மை உடையது. எள்ளிலிருந்து கிடைக்கும் எண்ணெய் குளிர்ச்சியானது. ஆக, சூட்டுத்தன்மை மிக்க ஒரு மூலப்பொருளில் இருந்து குளிர்ச்சித்தன்மையுடைய எண்ணெயை உருவாக்கும் ‘ரசவாதத்தை’ பனங்கருப்பட்டிதான் நிகழ்த்துகிறது.
பயன்பாடுகள்:-
சமைக்கவும், இட்லி & பருப்புப் பொடிகளுடன் கலந்து உண்ணவும், வாய் கொப்பளிக்கவும் (Oil Pulling), எண்ணெய் குளியலுக்கும் & விளக்கேற்றவும் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்
நன்கு தேறிய கொப்பரையுடன் (சல்பர் இல்லாதது) முதல்தரமான ஏலக்காய் & நாட்டு எலுமிச்சை சேர்த்து தயாரிக்கப்பட்டது. ஏலக்காய் மிகச்சிறந்த நறுமணம் தருவதுடன் செரிமானக் கோளாற்றை நீக்கும். எலுமிச்சம்பழம் எண்ணெயை நன்கு சுத்திகரிப்பதுடன், எளிதில் கெட்டுவிடாமலும் பாதுகாக்கும்.
பயன்பாடுகள்:-
சமைக்கவும், கூந்தலுக்கும், குடிக்கவும் & உடலில் பூசிக்கொள்ளவும் பயன்படுத்தலாம்.
மண்கட்டிய துவரம்பருப்பு:-
செம்மண்ணைக் குழம்பாகக் கரைத்து நாட்டுத்துவரைக்குப் பூசி ஒன்றாக குவித்து இரவில் உப்பவைத்து அவற்றைப் பிரித்து பகலெல்லாம் வெயிலில் உலர்த்தி (இவ்வாறாக இரண்டு நாட்கள் இவ்வாறாகப் பதப்படுத்தி துவரையை உடைத்து பருப்பையும் தோலையும் பிரித்து தூய்மைப்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதுதான் பாரம்பரிய முறையில் மண்கட்டிய துவரம்பருப்பு தயாரிக்கும் முறை.
பயன்பாடுகள்
சாம்பார் , பருப்புப்பொடி, பருப்பு உருண்டைக் குழம்பு, போன்றவற்றிற்கு உகந்தது. மணமும், சுவையும் மிக்கது.